உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய இலங்கை அணி வீரர் குசல் மென்டிஸ் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 77 பந்துகளுக்கு 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், மைதானத்திலிருந்து வெளியேறிய குசல் மென்டீஸிற்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
குசல் மென்டீஸிற்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், குசல் மென்டீஸ் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதமாக இன்று குசல் மென்டிஸ் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.