தனது பொறுப்பிலிருந்த பெண் ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை பரப்பிய குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணிணி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ஒக்டோபர் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது புகைப்படங்களைக் குறித்த நபர் பரப்புவதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.