எவ்வாறான தடைகள் சவால்கள் ஏற்பட்டாலும் பலஸ்தீன மக்கள் தமது சொந்த நிலத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என எகிப்தின் கைரோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மூண்டுள்ள மோதல் நிலையைத் தீர்த்து வைக்கும் நோக்கில் குறித்த மாநாடு எகிப்து ஜனாதிபதி அல் சீசியின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த மாநாட்டில் அமெரிக்க தூதுவர்கள் பங்கேற்றதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும் மேற்கத்திய ஊடகங்களின் படி அமெரிக்கா மாநாட்டில் பங்கேற்கவில்லை.
இஸ்ரேல் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.