நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மது விநியோக நிலையங்கள் யாவும் ஒக்டோபர் 03ஆம் திகதி மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினம் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 03ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனையொட்டியே மதுபானசாலைகள் யாவும் மூடப்படுகின்றது என்றும் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.