இன்று (25) முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
அதன்படி, சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 222 ரூபாய் எனவும், உளுந்து ஒரு கிலோ- 06 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 549 ரூபாய் எனவும், பருப்பு ஒரு கிலோ – 05 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 295 ரூபாய் எனவும், சிவப்பு அரிசி ஒரு கிலோ – 03 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 169 ரூபாய் எனவும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.