இத்தாலிக்கு செல்லத் தயாராகவிருந்த பௌத்த பிக்கு ஒருவரை தாக்கி அவரிடமிருந்த 112 யூரோக்கள் மற்றும் 7 இலட்சம் ரூபா இலங்கைப் பணம் அடங்கிய சூட்கேஸை கொள்ளையிட்டுச் சென்ற நபரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான தேரர் இத்தாலியில் வசிப்பதாகவும், இலங்கைக்கு விஜயம் செய்துவிட்டு மீண்டும் இத்தாலி செல்லவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நபர் ஒருவர் இந்த தேரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கையிலிருந்த பணம் அடங்கிய பையை பறித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.