மற்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கடன் மீட்பு வேலைத்திட்டம் மிக வேகமாக நடைபெற்று வருவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் மொராக்கோவின் மராகேஷில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மத்தியதர வருமானம் பெறும் நாடாக இருந்த இலங்கை நெருக்கடி நிலை காரணமாக குறைந்த வருமானம் பெறும் நாடாக மாறியதாக தெரிவித்தார்.
எதிர்காலத்தில் எந்தவொரு நாட்டிற்கும் பொருந்தும் வகையில் இலங்கையின் நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், மிக விரைவாக தீர்வுகளை வழங்குவதன் மூலம் அதே முறையை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.