அதிருப்தியடைந்த காதலியின் நிர்வாணப் புகைப்படங்களை பெரிதாக்கி அவரது வீட்டின் முன் வாயிலில் ஒட்டிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரிடம் இருந்து சிறுமியின் மேலும் 4 நிர்வாண புகைப்படங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவை பெரிதாக்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளன. மேலும் நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய மடிகணினியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
23 வயதுடைய முறைப்பாட்டாளரும் சந்தேகநபரும் மஹரகமவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததாகவும், பாடசாலை நண்பரான சந்தேக நபருடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெஸ்பேவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன சமரசிங்கவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.