முறிந்து விழும் அபாய நிலையிலுள்ள வீதியோர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பிரெமித்த பண்டார தென்னகோன், அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், சுற்றாடல் அதிகாரசபை வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு, வீதியோரங்களில் விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்களை உடனடியாக ஆய்வு செய்து பொது மக்களுக்கு அசச்சுறுத்தலாக உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.
இன்று (06) காலை கொள்ளுப்பிட்டி பாதையில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்த சம்பவத்தை அடுத்து இராஜாங்க அமைச்சர், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, முறிந்து விழும் அபாயத்தில் உள்ள வீதியோர மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.