நெதர்லாந்து பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா படுதோல்வி அடைந்தது.
உலகக் கோப்பையில் தர்மசலாவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர், மழையின் காரணமாக போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓதௌத் களமிறங்கினர். விக்ரம்ஜித் சிங் 2 ரன்களிலும், மேக்ஸ் ஓதௌத் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் நெதர்லாந்து வீரர்கள் காலின் அக்கர்மேன் (13 ரன்கள்), பாஸ் டி லீட் (2 ரன்கள்), சைபிராண்ட் (19 ரன்கள்), தேஜா (20 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அதிரடியாக விளையாக அவர் 69 பந்துகளில் 78 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அதேபோல இறுதிக் கட்டத்தில் நெதர்லாந்து வீரர் ஆர்யன் தத் 9 பந்துகளில் 23 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களின் முடிவில் நெதர்லாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி, மார்கோ ஜேன்சன் மற்றும் ககிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜெரால்டு கோட்டீஸ் மற்றும் கேசவ் மகாராஜ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. டேவிட் மில்லர் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்ட இழக்க தென்னாப்பிரிக்க அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.