மொபைல் போன் தொடர்பிலான பிரச்சினை முற்றிய நிலையில், 24 வயதான இளைஞனின் முதுகில் கத்தியால் குத்திக்கொலைச் செய்யப்பட்ட சம்பவமொன்று கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
கொட்டாஞ்சேனை குணானந்த மாவத்தையைச் சேர்ந்த சோரம் ஹரியம் என்ற இளைஞனை பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
படுகொலைச் செய்யப்பட்ட இளைஞனின் வீட்டுக்கு நண்பரொருவர் வந்துள்ளார். அவ்விருவரும் வீட்டுக்கு அண்மையிலுள்ள மின்மாற்றிக்கு அருகில் நின்று கதைத்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அவ்விடத்துக்கு வந்த மற்றுமொரு நபர், மொபைல் தொலைபேசி தொடர்பில் விசாரித்துள்ளார். அதனால் இவ்விருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இந்நிலையிலேயே, இளைஞனின் முதுகில் கத்தியால் குத்திவிட்டு அவ்விளைஞன் தப்பிச் சென்றுவிட்டார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
கத்தியால் குத்திய நபரை இனங்கண்டுள்ளதாக தெரிவித்த கொட்டாஞ்சேனை பொலிஸார், அவர் பிரதேசத்தில் இருந்த தப்பியோடி தலைமறைவாகிவிட்டார் என்றும் தெரிவித்தனர்.