2023ஆம் ஆண்டுக்கான சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தடகள வீராங்கனை தருஷி கருணாரத்ன வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன 2:03.20 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிய விளையாட்டு தடகளப் பிரிவில் இலங்கை பெற்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். (யாழ் நியூஸ்)