கூரிய ஆயுதங்களுடன் வீட்டினுள் நுழைந்த சிலர், அங்கிருந்தவர்களை பயமுறுத்தி சுமார் 20 கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மாதம்பை தம்பகல்ல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளையர்கள் வீட்டு உரிமையாளர்களைப் பயமுறுத்தி ஓர் அறையில் அவர்களை அடைத்தே இவ்வாறு கொள்ளையிடடு தப்பிச் சென்றுள்ளனர்.
தேங்காய் வியாபாரி ஒருவரின் வீட்டில் நேற்று (18) மாலை 7.00 மணியளவில் வேனில் வந்த நால்வர் இவ்வாறு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும், வாகனத்தின் திறப்புக்களையும் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.