களுபோவில, கொஹுவளையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த கார் ஒன்று 3 பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோதியதைத் தொடர்ந்து முச்சக்கரவண்டி முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடொன்றின் வாயில் மீது மோதியது.
விபத்தில் படுகாயமடைந்த ஒரு தாயும் அவரது ஒரு வயது குழந்தையும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்த குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதுடன், தாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு பெண்ணும் சிறு காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
உயிரிழந்த குழந்தை நுகேகொட பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வயதுடைய ஆண் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)