தனது ஆபாச காணொளிகளை பணம் சம்பாதிக்கும் நோக்குடன் இணையத்தில் பகிர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது ஆபாச காணொளிகளையே பணம் சம்பாதிக்கும் நோக்குடன் இணையத்தில் பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணை கைதுசெய்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் கணனி குற்றப்பிரிவினர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் நேன்று ஆஜர்படுத்தியுள்ளனர்.
குறித்த பெண் தனது கணவரின் துணையுடன் ஒரு நிமிட ஆபாச காணொளிக்கு ஆயிரம் ரூபா வீதம் என தனது வங்கிக் கணக்கில் பண வைப்பு செய்த நபர்களுக்கு காணொளிகளை இணையத்தில் பகிர்ந்துள்ளதாக கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றில் குறித்த பெண்ணை ஆஜர்படுத்திய நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.