போலியான இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிஷாந்த முத்துஹெட்டிகமவை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வலான ஊழல் பிரிவின் பணிப்பாளருக்கு அழைப்பாணை அனுப்பவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.