இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு தசுன் ஷானக்க இன்று (20) காலை அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர் தலைமைத்துவத்தை விட்டு விலக விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர் இன்று மாலை நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.