அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த(உ/த) பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் முஸ்லிம் மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபர் முபாரக் அவர்களின் புதல்வி பர்ஹத் பஹ்னா இம்முறை இடம் பெற்ற க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றி இரண்டு A மற்றும் ஒரு C சித்திகளையும் எம்.என். நிஸ்லா இரண்டு A மற்றும் C
சித்திகளையும் எம்.டி சாதிகா A மற்றும் இரண்டு C பெற்று மொணராகலை மாவட்டத்தில் முதல் வைத்திய பீடத்திற்கு தெரிவாகி மொணராகலை மாவட்டத்திற்கும் மெதகமை பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதோடு பௌதீக விஞ்ஞான பிரிவில் தோற்றிய மாணவர்களான எம்.ஆர் ரிம்னாத் தலா ஒரு A மற்றும் B,C பெற்றுள்ளார்.
மேலும் எம் அப்வான் ஒரு A, இரண்டு C களையும், நௌபர்தீன் மூன்று B களை பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி உள்ளனர்.
மேலும் வணிக பிரிவில் பஸ்ல் ரஹ்மான் ஒரு A மற்றும் இரண்டு B களையும் பெற்றுள்ளதோடு கலைப்பிரிவில் ரிஸ்தா இரண்டு A, ஒரு B , இஸ்ஸதுல் பஸ்னா இரண்டு A, ஒரு B , மற்றும் சம்ஹா, சிறாஜ் ஆகிய மாணவர்கள் ஒரு A, இரண்டு B பெற்று பல்கலைக்கழகம் நுழைய வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
மேலும் எமது பாடசாலை மற்றும் எமது ஊரிற்கு பெருமை தேடித்தந்த மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்.
தகவல்
ஏ.எச்.எம். சிஹார்