இனி தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக எந்தவொரு இணைய பரிவர்த்தனைகளையும் முன்னெடுப்பதில்லை என அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் மோசடியாளர்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறு அஞ்சல்மா அதிபர் ஆர்.பி.குமார தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு நிகரான இணையத்தளமொன்றை (slpost.gov.lk) உருவாக்கி பொதுமக்களின் வங்கி அட்டைகள் தொடர்பான தகவல்களை பெற்று மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அஞ்சல் திணைக்களத்தின் இணைய முகவரியும் மோசடியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அஞ்சல்மா மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.