இந்த மாத இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் தமது சந்தை செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் உள்நாட்டு எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரிகளுடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நிறுவனத்தின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளின் முன்னேற்றம், எரிபொருள் விநியோக முகவர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் அதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.