2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான சூப்பர் 11 ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டிக்கான ஒதுக்கப்பட்ட நாள் இணைக்கப்பட்டுள்ளது.
சீரரற்ற வானிலை காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான ஆட்டத்தின் போது இடைநிறுத்தப்பட்டால், போட்டி இடைநிறுத்தப்பட்ட இடத்திலிருந்து செப்டம்பர் 11, 2023 அன்று தொடரும்.
அத்தகைய சூழ்நிலையில், டிக்கெட் வைத்திருப்பவர்கள் தங்கள் போட்டி டிக்கெட்டுகளை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், அவை அன்றைய நாளில் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.