கசிப்புகாரன், கஞ்சாகாரன் என மக்களை சுட்டிக்காட்டாமல் கசிப்பு கஞ்சா போன்றவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என டயனா கமகே தெரிவித்துள்ளார்.
மதுபானங்களின் விலை அதிகரிப்பால் கள்ளச்சாரயத்தினை மக்கள் வீடுகளில் உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளனர். இது 500 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக வீடுகளில் கள்ளச்சாரயம் தயாரிக்கப்படுவதை தடுப்பதற்காக மதுபானங்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை மூளைச்சலவை செய்துள்ளனர். கஞ்சா, கள்ளச்சாரயம் பயன்படுத்துபவர்கள் கஞ்சாக்காரர்கள் கசிப்புகாரர்கள் என அழைக்கப்படுகின்றனர். கஞ்சா, கசிப்பு ஆகியவற்றின் பெறுமதியை மக்கள் உணர்வதில்லை என தெரிவித்த டயனா கமகே கள்ளச்சாரயம் ரஷ்யாவின் 'வொட்கா' போன்றது எனவும் தெரிவித்துள்ளார்.
சுத்தமான பழங்களை பயன்படுத்தி கள்ளச்சாரயத்தை தயாரிக்கின்றனர்; நாங்கள் அதனை பெருமளவில் உற்பத்தி செய்தால் நாங்கள் அதனை ஏற்றுமதி செய்ய முடியும். அதனால் நாங்கள் பெறக்கூடிய டொலர் வருமானம் எம்மால் கற்பனை செய்ய முடியாதளவு அதிகமாகும். பாராளுமன்றத்திலும் இந்த யோசனையை முன்வைக்கவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.