பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற குழுக்கள் அனைத்தில் இருந்தும் நீக்கும் பிரேரணைக்கு சபையில் இன்று (23) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் தங்கம் மற்றும் ஸ்மார்ட்போன்களை கடத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ரஹீன் எம்.பி பிடிபட்டார். அதன்பின்னர் தண்டப் பணத்தை செலுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்டார்.