எரிபொருள் விலையை நாளாந்தம் திருத்தம் செய்யும் முறைமையை அடுத்த வருடம் முதல் அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை கனியவள கூட்டுத்தாபன விநியோகத்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில், எரிபொருள் விநியோகம் மற்றும் புதிய எரிபொருள் நிலையங்களின் எதிர்கால அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட முறைமைக்கு மாற்றுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது