இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த வரி அதிகரிப்பு இன்று (22) முதல் அமுலுக்கு வருவதுடன், இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை சந்தையில் அதிகரிக்காது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.