சிலாபம் – அரைச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துப்பந்திய கடற்கரையில் சிசுவொன்றின் சடலம் நேற்றைய தினம் (24) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சடலமானது, பிறந்து ஒரு நாளான சிசுவுடையதாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முத்துப்பந்திய கடற்கரையில் இனந்தெரியாத இந்த சிசுவின் சடலத்தை மீனவர் ஒருவர் பார்த்து பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஹலவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹலவத்தை தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.