மத்திய மற்றும் தென் மாகாணங்களில் நாளை (27) மற்றும் ஒக்டோபர் 02ஆம் திகதிகளில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இணைய முறை மூலம் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை பெறுவது செப்டம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாததால் வாகன உரிமையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும் வகையில் நாளை முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் வசூலிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.