முச்சக்கர வண்டியின் சாரதியின் தலையில் சுத்தியலால் தாக்கி அவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு சென்ற இளைஞர் ஒருவரை அலவத்துகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக பிரதேசவாசிகளுக்கு அறிவித்ததையடுத்து, பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.
இதன்போது சந்தேக நபர் ஆட்டோ சாரதியிடமிருந்து கொள்ளையிட்ட தங்கச் சங்கிலியை வயலில் வீசி எறிந்த நிலையில் அதனைப் பொலிஸார் மீட்டனர்.
இந்த தங்கச் சங்கிலியின் பெறுமதி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என அலவத்துகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.