திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் பிற்போடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சபையில் உரையாற்றிய அமைச்சர், புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
பரீட்சைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
பரீட்சைக்கு வரும் மாணவர்களுக்கான தயாரிப்புகளுக்கு போதிய கால அவகாசம் இல்லாததும் முடிவெடுப்பதற்கான முக்கிய காரணியாகக் கருதப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)