ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு வருடங்களாக தன்னை துன்புறுத்திய போதிலும் தற்போது தான் உண்மை தானாக வெளிவருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சேனல் 4 வீடியோ மூலம் தாக்குதல் குறித்த தகவல்கள் தெரியவரும் என்றார். எதிர்வரும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தில் மிகக் கடுமையாகப் பேசவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சேனல் 4 அறிக்கை மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)