விமானங்கள் தாமதமடைந்தமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிப்பதற்காக காத்திருந்த, பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்பகோளாறு மற்றும் ஏனைய காரணங்களால் பல விமானங்கள் பயணிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இருந்து, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிக்கவிருந்த விமான சேவைகளிலே இந்த தாமத நிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.