கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செய்திகள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
தபால் மூலம் பார்சல் கிடைத்துள்ளதாகவும் முகவரி தெளிவின்மை காரணமாக அதனைத் திருப்பி அனுப்ப வேண்டியுள்ளதாகவும், எனவே அதனைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பணம் பெறுவதற்காக மக்களின் இரகசிய தகவல்களை பெற்று பண மோசடி செய்ய வாய்ப்புள்ளதாக இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.