'800' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கிரிக்கெட் வீரர் சச்சின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளராக சாதனைப் படைத்துள்ளார் முத்தையா முரளிதரன். அவரது வாழ்க்கை வரலாற்று படமாக '800' உருவாகி இருக்கிறது.
இப்படத்தில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் மதுர் மிட்டல் நடித்துள்ளார். இதில் முரளிதரன் மனைவி மதிமலர் ராமமூர்த்தியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய இந்தப் படத்தை புக்கர் பரிசு (2022) பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலகா இணைந்து எழுதியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் விழா செப்டம்பர் 5ஆம் திகதி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தமிழில் உருவாகி இருக்கும் இப்படம் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.