பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள பள்ளிவாயல் அருகே இன்று (29) தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 130 பேர் காயமடைந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிலாத்உன்நபி கொண்டாட்ட ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிவாயல் அருகில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த இடத்தில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.