தெஹிவளை பள்ளிவாசலின் 50 கோடி வக்பு சொத்தை அபகரிக்க முயற்சி! வக்பு சபைக்கு எதிராகவும் வழக்கு விழைவுகள்! விபரீதமாகுமுன் சமூகம் கண்திறக்குமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெஹிவளை பள்ளிவாசலின் 50 கோடி வக்பு சொத்தை அபகரிக்க முயற்சி! வக்பு சபைக்கு எதிராகவும் வழக்கு விழைவுகள்! விபரீதமாகுமுன் சமூகம் கண்திறக்குமா?


(வெளிவராத திடுக்கிடும் உண்மைகள்)

அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்திற்காக அன்பளிப்பு செய்யப்பட்ட பல நூறு கோடிக்கணக்கான ரூபாய்கள் பொறுமதி வாய்ந்த வக்பு சொத்துக்கள் அபகரிப்பு சம்பந்தமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில் சம்பந்தப்படுவது சமூகத்திற்கு கோடிகளை செலவு செய்து வழிகாட்ட வேண்டிய முக்கிய புள்ளிகளும், முக்கிய உலமாக்களுமாகும் என்பது ஒரு கவலைக்குரிய விடயமாகும்.

இந்த வகையில் கபூரியா, சுலைமான் வைத்தியசாலை, கல்லெலிய பெண்கள் மதரஸா, மாகோல அனாதை இல்லம், ராஜகிரிய பள்ளிவாசல், கல்ஹின்னை பள்ளிவாசல், மேலும் தொடரும் பட்டியலில் தெஹிவளை பள்ளிவாசலும் இனைக்கப்படுமா?

தெஹிவளை கல்விஹார வீதியில் (Athappathu Place ) இலக்கம் 14 இல் உள்ள சுமார் 80 போச் BULUGAHAWATTA. PLAN NO. 548 YEAR 1966 ஆண்டு அளவை இடப்பட்ட காணியை 1997.10.31 ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவை சேர்ந்த OMAR SALEH ABDULAZIZ BABAKER (ஒமர் ஸாலி அப்துல் அஸீஸ் பாபக்கர்) என்ற சகோதரர் கொள்வனவு செய்து ஒரு தஃவா நிறுவணத்தின் பெயரில் எழுதி இதன் பராமரிப்பை அந்த நிறுவணத்தில் பணிபுரியம் சில உலமாக்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார். 

காலப்போக்கில் இவ்வுலமாக்கள் மீது சந்தேகங் கொண்ட தனவந்தர் பாபக்கர், மீண்டும் இலங்கை வந்து தான் வாங்கிய இச் சொத்தை 50 லற்சங்கள் பெறுமதியிட்டு தனது பெயரில். 2002.07.24 அன்று, சட்டத்தரணி சபீர் ஸவாத் அவர்கள் எழுதிய உரிமைப்பத்திரத்தின்படி Plan Number 118/2002 - 2002.04.25 licensed Surveyor Rasappah அளவீடு செய்த Deed Number 129 பிரகாரம் தனது பெயரில் உரிமையை மாற்றம் செய்துகொண்டார்.

தற்போது இதன் உரிமையார் பாபக்கர் என்பதே உண்மை. இக்காணியானது தஃவா நிறுவணத்தினது, மற்றும் உலமாக்களினது என பரப்பப்படுவதானது அப்பட்டமான பெய்யாகும். இதை கைப்பற்றும் நோக்கத்திலேயே சிலர் இவ்வாறான ஒரு பிரச்சாரம் ஒன்றை முன்னேடுத்துச் சென்றது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உரிமையை மாற்றிய தனவந்தர், பின்னர் இவ்விடம் முஸ்லிம் சமூகம் பிரயோசனப்படும் வகையில், இந்த இடத்தில் ஒரு மஸ்ஜித் அதனுடன், மதரசா, வாசிகசாலை, வெளியூர் மாணவர்கள் தங்கி படிக்கும் வகையிலான அறைகளை அமைக்கும் மறுமைக்கான தனது நோக்கத்தை, தனது நீயத்தை நிறைவேற்ற குறிப்பிட்ட உலமாக்களின் பொறுப்பில் மீண்டும் விட்டுச் சென்றார். 

தற்போது இதன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளராக OMAR SALEH ABDULAZIZ
BABAKER என்ற சவ்தியைச் சேர்ந்த தனவந்தரே இன்று வரை காணப்படுகிறார். (Deed No 129) இதன் இன்றைய இதன் சந்தைப் பெறுமதி சமார் 50 கோடிகளாகும். 

இது ஒரு தஃவா நிறுவணத்திற்கு சொந்தமானது என பரப்ப்பட்டிருக்கும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதும் அப்பட்டமான பொய்யுமாகும் . 

மேலும் 2002.07.24 ஆம் ஆண்டு காணியை தனது பெயரில் மாற்றிய தனவந்தர் பாபக்கர், நாட்டிடை விட்டு வெளியேறுமுன், இதை முஸ்லிம் சமூகத்திற்கு உரிமையான ஒரு பொதுச் சொத்தாக பிரகடனப்படுத்தும் பொருட்டு தெஹிவளை மாநகர நகர சபையில் தனது சுய விருப்பு கடிதத்தை கையளித்து பள்ளிவாசலும் பாடசாலையும் என பதிவு செய்து இதை பொதுச் சொத்தாக பிரகடனப்படுத்தினார். 

இத்தோடு இக்காணி தொடர்பான தனி மனித அதிகாரங்கள், தஃவா நிறுவனத்தின் உரிமைகள், உலமாக்களின் அதிகாரங்கள் முற்றுப் பெறுவதோடு, நகர சபையானது தஃவா நிறுவணத்தின் பெயரில் இருந்த Assessment Cancel செய்து, OMAR SALEH ABDULAZIZ BABAKER என்ற தனி நபர் பெய‌ரில் Assessment பதிவு செய்தது. தற்போது புதிதாக திருட்டுத் தனமாக இதன் உரிமைப் பத்திரத்திற்கு சம்பந்தமே இல்லாத பெயர்களும் இதை கைப்பற்ற முற்படும் இவர்களால் இனைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக நகர சபை அதிகாரிகளிடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியபோது, இந்த உறிமை மாற்றம் சட்ட விரோதமானது. இதில் குளறுபடிகள் நடந்துள்ளது என்பதை ஏற்றுக் கொண்ட அவர்கள், இது பள்ளிவாசலுக்கான பொதுச் சொத்தாகும் அதில் மாற்றுக் கருத்துக்கு இல்லை. நீதிமன்றம் என வரும்போது தமது கடமையை சரியாக செய்வதாக தெரிவித்தனர். மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது ஒரு முஸ்லிம் பள்ளிவாசல் என எழுத்து மூலமும் வழங்கியுள்ளனர்.

பாபக்கர் அவர்களின் எழுத்து மூலமான வேண்டுதலின் பிரகாரம் இந்த இடம் 2003 ஆம் ஆண்டு முதல் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, தெஹிவலை மாநகர சபை அன்று முதல் இன்று வரை இதற்கு வரி விலக்கும் அளித்து வருகின்றது. Assessment Number 14, Galvihara Road, Dehiwala. அத்தோடு இது முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமான பள்ளிவாசலாக பொதுச் சொத்தாக மாறுகிறது.

காணியை வாங்கி அன்பளிப்பு செய்த நாள் முதல், இப்பகுதி மக்கள் இதிலிருந்த ஒரு பழைய வீட்டை பள்ளிவாசலாக புணரமைத்து ஐவேளைத் தொழுகையும் நடத்தி வருகின்றனர்.

காலப்போக்கில் தனவந்தர் பாபக்கர் இனி இலங்கை வரமாட்டார் என்பதை அறிந்து கொண்ட இவ்வுலமாக்கள், இதை விற்பனை செய்ய முயற்சித்தனர். இதை வாங்க பிரபல முஸ்லிம் தனவந்தர்கள் பலர் முன்வந்த போதிலும், இது ஒரு பள்ளிவாசலுக்காக வாங்கப்பட்ட காணி என்பதை மக்களிடம் அறிந்து கொண்ட அவர்கள், இதை வாங்க வந்த தனவந்தர்கள் மக்களிடம் விடயத்தை அறிந்து சகலரும் கைவிட்டு சென்றனர்.

இவர்களின் முயற்சி தோல்வி அடையவே தனியார் கம்பெனிகளை அணுகி இவ்விடத்தில் (Apartment) தொடர்பமாடி வீட்டுத் தொகுதி ஒன்றை நிர்மாணம் செய்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போதைய நகர சபை முன்னால் உறுப்பினர் சகோதரர் ஹஸன் அவர்கள் இது பள்ளிவாசலுக்கு வாங்கப்பட்டது என்பதை அறிந்ததனால் இதை கடுமையா எதிர்த்தார். அதிலும் இவர்களின் முயற்சி தோல்வியடைந்தது.

இதில் அகில இலங்கை ஜமீயதுல் உலமவின் முக்கிய நிர்வாக உறுப்பினரான செயலாளர்களில் ஒருவரும் இந் நாடகத்தில் முக்கிய பங்காளியாக இருப்பதும்
வியப்பாக உள்ளது.

இதை அறிந்து கொண்ட மக்கள் 2012 ஆம் ஆண்டு, இக் குறிப்பிட்ட உலமாக்களை இப்பள்ளிவாசலுக்கு வரவழைத்து இது சம்பந்தமாக பிரச்சனைப் படுத்தவே ரமலான் மாதம் முடிந்து இரு வாரங்களில் இதை வகுக்பு சபையில் பதிவு செய்து தருவதாக இம்மோசடியுடன் சம்பந்தப்பட்ட
ஜமீயத்துல் உலமாவின் செயலாளர்களில் ஒருவர் பொது மக்களையும், அல்லாஹ்வையும் சாட்சியாக வைத்து, "வல்லாஹி பில்லாஹி தல்லாஹி" என அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தி சுமார் 200 போர் வரையிலான மக்கள் முன்நிலையில் சத்தியம் செய்து , இவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றனர்

(2012 நடந்த இச்சம்மபவத்தின் வீடியோ இனைப்பு)

இச்சம்பவந்தின் போது சாட்சிகூற பள்ளிவாசலுக்கு வருகை தந்த நகரசபை உறுப்பினர் ஹஸன் அவர்கள் பள்ளிவாசலில் அப்போது இதனுடன் சம்பந்தப்பட்ட சில உலமாக்களை சுட்டிக்காட்டி இவர்கள் தன்னை தேடி வந்ததாகவும். இவ்விடத்தில் எபாட்மன்ட் ஒன்றை கட்ட அனுமதி
பெற்றுத்தரும்படியும் இவர்கள் கூறியதாக அங்கு வீற்ரிருந்த இருந்து உலமாக்களை சுட்டிக்காட்டினார்கள். இதன்போது மக்கள் இவர்களை தாக்க முட்பட்டபோதே அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மக்களிடம் இருந்து தப்பிச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே இப்பள்ளிவாசலை மையமாக வைத்து, இலங்கையில் சில இனவாதிகளினால், வக்பு சபையில் பதிவுகள் இல்லாத அனைத்துப் பள்ளிவாசள்ளிவாசல்களும் மூடப்பட வேண்டும் என்ற கோசங்கள் எழுப்பப்பட்டு, இப்பள்ளி வாசலும் மூடப்பட வேண்டும் என்ற கோசமும் ஆர்பாட்டங்களும் மேலோங்கியது. இவ் ஆர்பாட்டத்தை பக்கத்து விஹாரை தேரரே முன்னெடுத்துச் சென்றார்.

இதன் போது இந்தப்பள்ளிவாசல் விடயத்தில் நேரடியாகத் தலையிட்ட அப்போதைய அமைச்சர்களான அமைச்ர் பவுஸி, அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் இப்பள்ளி வாவாசலுக்கு அடிக்கடி விஜயம் செய்து, அக்காலப்பகுதியில் கலாச்சார அமைச்சின் செயலாளராக இருந்த தேரரை பள்ளிவாசலுக்கு வரவழைத்து, இப்பள்ளிவாசலின் வக்பு பதிவுகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடாத்தினார்கள். இக்கால கட்டத்தில் இனவாத தலையீடு காரணமாக பள்ளிவாசல் பதிவுகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

இதன் போது குறிப்பிட்ட தேரர் இதை வக்பு சபையில் பதிவு செய்து தருவதாக
அமைச்சர்கள் மத்தியி்லும் பொதுமக்கள் முன்நிலையிலும், பள்ளிவாசளினுள் வைத்து வாக்குறுதி அளித்தார்.

இதன்படி இதற்கான ஆவனங்களை வக்பு சபையிடம் கையளித்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர குறிப்பிட்ட உலமாக்கள் அப்போது அமைச்சர்கள் முன் நிலையிலும் குறிப்பிட்ட தேரர் முன்நிலையிலும் மக்கள் முன்நிலையிலும் வாக்குறுதியளித்தனர்.

மேலும் இதே இக்காலப்பகுதியில் இப்பள்ளிவாசலை மையமாகவைத்து வெள்ளவத்தை இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் அக்கால வக்பு சபையின்
தலைவர் நவவி அவர்களின் தலைமையில் பெரிய ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு பதிவுகள் இல்லாத மற்றும் பள்ளிவாசகள் ஆவணங்களில் பிரச்சினை காரணமாக பதிவுகள் தாமதமாகும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளை வரவழைத்து அனைத்து பள்ளிவாசால்களின் பிரச்சினைகளும் ஆராயப்பட்டு அனைத்து பள்ளிவாசல்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகானப்பட்டு, அவசர அவசரமாக பதிவுகள் முடிக்கப்பட்டன . 

இக்கூட்டத்தில் காலஞ்சென்ற ஆளுநர் அலவி மெளலானா உற்பட அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதிலும் இவ்வுலமாக்களும் கலந்து கொண்டனர்.

இப்பள்ளிவாசலை மையமாக வைத்து எழுப்பப்பட்ட இனவாதம் காரணமாக அனைத்துப் பள்ளிவாசல்களின் பிரச்சனைகளும் தீர்ந்த போதிலும், இப்பள்ளி வாசலுக்கு பொறுப்பான தனவந்தர் பாபக்கர் அவர்களால் இதை ஒரு பள்ளிவாசல மாற்றி ஒழுங்கமைக்கும்படி பொறுப்பு சாட்டப்பட்ட இவ்வுலமாக்கள் இதை விற்பனை செய்யும் நோக்குடன் ஆவணங்களை கையளிப்பதில் சூட்சகமாக மேற்கொண்ட பின்னடைவின் காரணமாக இப்பள்ளிவாசலின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இவர்கள் இவ்விடத்தை மறக்கடிப்பும் மக்களையும் தலைவர்களையும் ஏமாற்றும் விதமான நடைமுறைகளை மிக மிக னுனுக்மாக கைக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து இப்பிரதேச மக்கள் இதை விற்பனை செய்வதை தடை செய்யும் விதத்தில் (கேவியட்) விற்பனை தடை உத்தரவையும் பெற்று இவர்களின் பள்ளிவாசல் விற்பனைக்கு எதிராக கல்கிஸ்லை நீதிமன்றத்தில் வழக்கொன்றையும் தாக்கல் செய்தனர். (TR/84/18) வழக்கானது சுமார் ஆறு வருடங்களாக சென்று கொண்டிருக்கின்றது.

பள்ளிவாசல் சொத்தை விற்பதற்கு எதிரான இவ்வழக்கின் பிரதி வாதியாக ஜமீயதுல் உலமாவின் செயலாள‌ர் ஒருவரும் பெயரிடப்பட்டுள்ளார்.

இதில் விசித்திரம் என்னவென்றால், மாற்று மத சட்டத்தரணிகள் இது முஸ்லிம் மக்கள் தொழும் பள்ளிவாசல், இது காப்பாற்றப்பட வேண்டும் என வாதாடும் அதேவேலை, உலமாக்களின் சார்பில் வாதாடும் நமது சில முஸ்லிம் சட்டத்தரணிகள் இது பள்ளிவாசல் அல்ல இது மூடப்பட வேண்டும் என வாதாடி வருவது வியப்பிற்குற்குரிய அம்சமாகும். 

மேலும் இவ்வுலமாக்கள் இப்பொதுச் சொத்தின் உண்மையை மறைத்து, இதை 2012 ஆம் ஆண்டு அல்லாஹ் மீது சத்தியம் செய்த இவர்கள் இதை தமதாக்கிக்கொள்ளும் பொருட்டு "இது முஸ்லிம் பள்ளிவாசல் அல்ல" என நீதி மன்றத்திற்கு சத்தியம் செய்து சத்ய கடதாசிகள் பலதையும் கையளித்துள்ளனர்.

மேலும் இதை எப்படியாவது மூடி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இது இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல் அல்ல எனும் கலாச்சார அமைச்சின் கடிதம் ஒன்றையும், இவர்களின் செல்வாக்கை பயண்படுத்தி 2018.09.12 திகதியிட்டு அக்காலத்தில் கடமையாற்றிய மலிக் என்ற உயர் அதிகாரியின் கையெப்பத்துடன் Ref : ( MRCA/ WD/C/NR/ 01 குறிப்பிட்ட உலமாக்கள் நீதி மன்றத்தில் சமர்பித்ததும் குறிப்பிடத்தக்கதுமான அம்சமாகும். 

மாற்று மத சகோதரர்கள் பள்ளிவாசலுக்காக நீதிமன்றத்தில் நீதி கோரி தோன்றும் இவ்வழக்கில், இதேவேலை, இதை மூடி விட வேண்டும் என சில இனவாதிகள் துடித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இவ்வாறான கடிதங்கள் இப்பள்ளிவாசலை மூடத்துடிக்கும் தேரரின் கையில் சிக்குமாயின், இப்பள்ளிவாசளின் நிலைமை , பாரதூரம் என்ன என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும். 

மேலும் இதற்கிடையில், பொதுச் சொத்தாக பள்ளிவாசலாக தெஹிவளை நகர சபையில் பிரகடனப்படுத்தப்பட்டு வரி விலக்கு அளிக்கப்டட்ட இப்பள்ளி வாசலை, பல முறை மக்கள் வக்பு சபையில் பதிவு செய்ய முயற்சிகள் செய்த போதிலும், இதை பதிவு செய்யாமல் குறிப்பிட்ட உலமாக்கள் அவர்களின்
செல்வாக்கை பயண்படுத்தி இதை தடுத்து வந்தனர். வக்பு சபையும் உண்மையைத் தேடிப் பார்க்காமல் சில உலமாக்களின் ஆட்டத்திற்கு தாளம் போட்டது. 

எனவே இப்பொதுச் சொத்தை பாதுகாக்கத் தவறிய வக்பு சபைக்கு எதிராக மக்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது சம்பந்தமான வழக்கு எதிர்வரும் 18ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மக்கள் எடுத்த அனைத்து முயற்சியும் தோல்வி அடையவே, பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியை இவர்களிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு, இதை ஒரு ஜும்மா மஸ்ஜிதாக பிரகடனப்படுத்த மக்கள் செய்த முயற்சிகளின் ஒரு அங்கமாக 2018.03.29 அன்று ஊர்மக்களால் இங்கு ஜும்மா தொடங்கி வைக்கப்பட்டது.

ஒரு ஜும்மா நடந்து இரண்டாவது ஜும்மா நடக்கும்போது இங்கு சில பாதாள உலக கோஷ்டியினர் அனுப்பப்பட்டு ஜும்மா தொழுகைக்காக வந்த வயோதிபர்கள் சிறுவர்கள், ஜும்ஆ தொழுகை நடத்த வந்த உலமா உட்பட அனைத்து மக்களும் இந்த ஈவிறக்கம் அற்றவர்களால் விரட்டி அடிக்கப்பட்டு, பள்ளிவாசலும் இவர்களால் இழுத்து மூடப்பட்டது. இது ஒரு ரமளான் மாதம் வெள்ளிக்கிழமை நடந்த, நடக்கக்கூடாத ஒரு துரதிஷ்டவசமான ஒரு சம்பவமாகும்.

இது ஒரு பள்ளிவாசல் அல்ல என நீதிமன்றத்தில் வாதடும் இவர்கள் அல்லாஹ்வையும் ஏமாற்ற முயற்சிப்பதோடு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலைனை 24 மஸ்ஜித்களைக் கொண்ட மஸ்ஜித் சம்மேலனத்தின் மாதாந்தக் கூட்டங்களிலும் 24 பள்ளிவாசல்களுக்குமான பொலீஸ் நிலையத்தில் நடைபெறும் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டங்களிலும் வந்து உட்கார்ந்திருப்பதானது பொதுமக்களை ஏமாற்றும் இவர்கள், மஸ்ஜித் சம்மேலனத்தையும் ஏமாற்றி பாதுகாப்பு தரப்பையும் ஏமாற்றுகின்றனர்.

உலகத்தை படைத்து பரிபாலித்து வரும் அந்த வல்லோன், தனது மாளிகையான இதைப் பாதுகாக்க நாடினான். கொரோனா காலப்பகுதியில் இப் பகுதியில் இப்பிரதேச மக்களுக்காக தொடங்கி வைக்கப்பட்ட ஜும்ஆ இன்று சுமார் 600 பேர் கலந்து கொள்ளும் மாபெரும் ஜும்ஆவாக நடைபெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்பள்ளியில் நடைபெறும் ஜும்மாவை நிறுத்தும் நோக்கத்துடனே அகில இலங்கை ஜமீயத்தில் உளமாவினால், கொரோனாவின் போது தொடங்கி வைக்கப்பட்ட ஜும்மாக்கள் நிறுத்தப்பட வேண்டும் என சுற்றிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இச் சுற்றறிக்கையானது இப்பள்ளி அபகாரிப்புடன் சம்பந்தப்பட்ட செயலாளரின் ஒரு சாதியாகும். 

இவர்களின் அனைத்து சதித் திட்டத்தையும் தற்போது அறிந்து கொண்ட தெஹிவளை அனைத்து பள்ளி சம்மாளனம் இதை கடுமையாக எதிர்த்ததாகவவும், சென்ற மாதக் கூட்டத்தில், இவ்விடத்தில் தனவந்தர் பாபக்கர் அவர்களின் வஸீயத்தை தவிர, பள்ளிவாசலை அழிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் எந்த திட்டத்தையும் பள்ளிச் சம்மேளனம் அங்கீகரிப்பதில்லை எனவும், இவர்கள் இதை மீறுவார்களாயின் தெஹிவளை பகுதி அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி இப்ப பள்ளிவாசலை காப்பாற்ற ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(அல்ஹம்துலில்லாஹ்)

நிலைமை இவ்வாறு சென்று கொண்டிருக்க, 2012 ஆம் ஆண்டு மக்கள் மத்தியி்ல் அல்லாஹ் மீது சத்தியமிட்டு வக்பு சபையில் பதிவு செய்வதாக வாக்குறுதி அளித்து, அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் மத்தியில் ஆவணங்களை கையளிப்பதாக வாக்குறுதி அளித்த இவர்கள் 2015.01.12 ஆண்டு மற்றும் 2015.03.25 ஆம் திகதியிட்ட படி, பாபக்கர் இவர்களுக்கு அதிகாரங்களையும் வழங்கியதாக சில ஆவணங்களை தயாரித்துள்ளனர்.

2015.01.12 ஆவணம் Power of Attorney ஓர் ஆவணம் எழுதப்பட்டுள்ளது.

Document 156 / 03 / 769 இவ் ஆவணத்தின் பிரகாரம் இந்த இடம் சம்பந்தமாக. Babake Trust என்ற பெயரில் Trust ஒன்றை பிரகடனப்படுத்த இக்குழுவில் இருவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. 

இந்த இடம் சார்பாக எழுதப்பட்ட Attorney Power ஓரு புறம் இருக்க, 2002 ஆம் ஆண்டு நகர சபையில் தன் கைப்பட எழுத்து மூலமான விருப்பத்தை தெரிவித்து ஒரு சொத்து பொதுச் சொத்தாக பிரகடனப்படுத்தியதன் பிற்பாடு, இதற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதன் பிற்பாடு இப்பொதுச் சொத்தை 2015.01.25 ஆம் ஆண்டு அதன் அதிகாரங்களை மாற்றீடு செய்ய, அதன் உரிமையாளருக்கோ வேறு நபருக்கோ இதை திரும்பப் பெறவோ அதிகாரங்களை கைமாற்றம் செய்யவோ எந்தவித உரிமையும் அதிகாரமும் இல்லை என்பதே சட்டத்தரணிகளின் வாதமாகும். தொடர்ந்தும் பொதுச்சொத்தாகவே கருதப்படுகின்றது. எனவே இது ஒரு பொதுச்சொத்து என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

மேலும் இந்த Attorney Power சவுதி அரேபியாவில் எழுதப்பட்டு இலங்கையைச் சேர்ந்த இருவர் சாட்சிகளாக ஒப்பமிட்டுள்ளனர். பாபக்கர் என அரபியில் கையெழுத்தும் ஆங்கிலத்தில Babeker என்ற முத்திரையும் பொறிக்கப்பட்டுள்ளது.

இவ்ஆவனங்கள் சவுதி அரேபியாவில் கையொப்பமிடப்பட்டதாக உள்ளது. மேலும் இவ்ஆவனங்களில் வதியாதார் வெளிநாட்டு சொத்துப் பரிமாற்றங்களின்படியான, தூதுவராலயங்கள் மூலமான முறையான,
நடைமுறைகளை பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. இவ் ஆவணம் நுகேகொடை தெல்கந்தை காணிப்பதிவு தினைக்களத்தில் பதிவு செயபாபட்டுள்ளதோடு இதற்கான ஆவணங்கள் அங்கே காணப்படுகின்றன. இவ் ஆவணங்கள் சம்பந்தமாக சட்டத்தரணிகள் பல வித்தியாசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இரண்டாவது இந்த Attorney Power ஆவணத்தின் படி இவர்களால் இக்காணி தொடர்பாக Trust (அறக்கட்டளை) ஆவணம் எழுதப்பட்டுள்ளது. தனவந்தர் ஒருவர் ஒரு சொத்தை வாங்கி, அதை அவர் தன் கையால் பொதுச் சொத்தாக படுத்தியதன் பின்பு மூன்றாம் நபரால் இதற்கான அறக்கட்டளை ஆவணம் தயாரிக்கலாமா என்பது அடுத்த பிரச்சனையாகும்.

மேலும் இதைத் தொடர்ந்து இக்காணி தொடர்பாக இலக்கம் 1139 அடையாளமிட்டு சட்டத்தரணி ஒருரால் 2015. 01. 25. Trust (அறக்கட்டளை) ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

2015.01.25 அன்று எழுதப்பட்ட 5 trustees (நம்பிக்கையாளர்) நியமிக்கப்படடுள்ளனர். இவ்ஆவணத்தில் சில இடங்களில் பள்ளிவாசல்
என குறிப்பிடப்பட்டிருக்கும் அதேவேலை, பள்ளிவாசலை துண்டுகளாக விற்கவும். வட்டிக்கு அடகு வைக்கவும் முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுதானது ஒரு வேடிக்கையான அம்சமாகும்.

இது பள்ளிவாசல் அல்ல என இவர்கள் வாதடுவதின் பின்னணி இதுவாகும். பாபக்கர் அவர்கள் பள்ளிவாசலுக்காக வாங்கிய காணியை கைப்பற்றவே இத்தனை சதியுமாகும்.

பாக்கரின் பெயரில் உள்ள காணியை விற்பனை செய்ய முடியாததின் காரணமாக பள்ளிவாசல் அமைக்கும் பெயரில் உரிமையை பெற்று, அல்லது ஆவணத்தை தயார் செய்து Attorney Power மூலம் அதிகாரத்தை பெற்று, அதன் மூலம் அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலம் காணியை விற்பனை செய்ய, கைமாற்ற, அடகு வைக்க முடியும் என்ற சரத்தை உற்படுத்தி இதனை விற்பனை செய்வது இவர்களின் Master Plan ஆகும்.

Trust (அறக்கட்டளை)
section (05)
THE BOARD OF TRUSTEES 
SHALL HAVE POWER

Section (F)
To sell, gift, exchange, or mortgage the trust property or any part of parts thereof the proceeds of any such dealing to form part of the trust property or to donate properties part of the rust property. 

அறக்கட்டளைச் சொத்தின் ஒரு பகுதியை உருவாக்க, அபிவிருத்தி செய்ய, அல்லது அறக்கட்டளைச் சொத்தின் சொத்துக்களை நன்கொடையாக வழங்க, அறக்கட்டளைச் சொத்தை அல்லது அதன் பாகங்களில் ஏதேனும் ஒரு பகுதியை விற்பது, ப பரிசளிப்பது, பரிமாற்றம் செய்வது அல்லது அடமானம் வைப்பது)

(to sell, gift, exchange or mortgage) என்ற வாசகம் இனைக்கப்பட்டுள்ளது. அதிலும் வட்டிக்கு அடகுவைக்க சவ்தி அரேபியாவில் மிகப் பெரிய கோடீஸ்வர தனவந்தர் பாபக்கர் பள்ளிவாசலுக்காக வாங்கப்பட்ட சொத்தை வட்டிக்கு அடமானம் வைக்க, துண்டங்களாக விற்பனை செய்ய அனுமதியளிதாரா?

மேலும் ஸதகதுல் ஜாரியாவாக பள்ளிவாசலுகாக வாங்கிய இச்சொத்தை தமக்கு விற்பனை செய்யவும் வட்டிக்கு அடகு வைக்கவும் முடியும் என உலமாக்களுக்கு அதிகாரம் வழங்கி இருப்பது இதில் குறிப்பிடதக்க முக்கிய அம்சமாகும். 

மேலும் இவ் அறக்கட்டளை ஆவணத்தில் மேலே இடங்களில் பள்ளிவாசல் என குறிப்பிடும் அதேவேளை, கீழே சில இடங்களில் இது பள்ளிவாசல் அல்ல தனியார் சொத்து எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

"சத்தியம் அசத்தியத்தில் இருந்து தெளிவானது விலகியே நிற்கும்" என்ற குர்ஆன் வசனத்தை அல்லாஹ் தன் மாளிகையை பாதுகாக்க இங்கும் நிரூபித்துளான்.

அதிலும் மிக விஷேட அம்சம், 1139 என இலக்கமிட்டு 2015 ஆண்டு, அதாவது அண்மைக் காலத்தில் தயார் செய்யப்பட் இவ்ஆவணம் காணிப் பதிவுத் திணைக்களத்தின் உள்ள இதன் History இல் பதிவில் உள்ள போதும், இதன் பிரதிகள் அங்கு காணப்படவிலை என தகவ‌ல் அறியும் சட்டத்தின் கீழ் எழுத்து மூலமான பதில் கிடைத்துள்ளது.

பொதுச் சொத்தொன்றை அபகரிக்க இவர்கள் படும் பாடும் அசிங்கங்களுக்கும் என்ன சொல்லல, யாரிடம் சொல்ல. 

மேலும் இது சம்பந்தமான சில ஆவணங்கள் காணிப்பதிவுத்தினை களத்தில் காணாமல் போய் உள்ளதோடு, தெஹிவளை மாநகர சபையில் தனவந்தர் பாபக்கர் கையளித்த கடிதங்களும் இன்னும் ஆவணங்களும் காணாமல் போய் உள்ளது. அத்தோடு நகர சபை பதிவு புத்தகத்தில் நிஜமான உரிமையாளரின் பெயருக்கு பதிலாக இவர்களுக்கு ஏற்றவாறு வேறு சில பெயர்களும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாபக்கர் அவர்களின் வஸீயத்திற்கு அமைவாக அவரின் அனுமதப்படியும், அவரது ஆலோசனைப்படியும் நகரசபையில் அனுமதி அளிக்கப்படு பள்ளிவாசல், மதரஸா வாசிகசாலை மாணவர்கள் தங்கும் அறைகளை போன்ற அடங்கிய கட்டிடம் ஒன்றுக்கு நகரசபை அனுமதி அளிக்கப்பட தகவல்களும் உள்ளன ஆனால் இவற்றை இவர்கள் மறைத்துள்ளனர்.

அண்மையில் கிடைத்த தகவலின் படி, இக்காணியில் எப்பார்ட்மெண்ட் ஒன்றைக் கட்டி விற்பனை செய்யும் முயற்சிக்கு ஒரு எப்பார்ட்மெண்ட் கட்டும் ஒரு முஸ்லிம் நிறுவனம் முன் வந்துள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

மேலும் அண்மையில் காணியில் இருந்த பல லட்சங்கள் பெறுமதியான மகோங்கனி மரங்கள் உட்பட பல மரங்களை இவர்கள் திருட்டுத்தனமாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்கும்போது மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிராக மக்கள் தெஹிவளை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இது சம்பந்தப்பட்ட உலமாக்கள் உற்பட அனைவரையும் பொலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி ,தெஹிவளை பொலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

எனவே தற்போது இப்பகுதி மக்களுக்கும்காணி அபகரிக்க முயற்சி செய்யும் குழுக்களுக்கிடையிலும் கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதோடு, விளைவுகள் விபரீதமாகும் கட்டத்தை அடைந்துள்ளது. இது சம்பந்தமாக தெஹிவளை போலீஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

கடந்த ரமலான் மாதத்தில் பள்ளிவாசலின் இடநெருக்கடி காரணமாக
சுமார் 60 லற்சங்கள் செலவு செய்து இப்பகுதி மக்கள் இதை விஸ்தரிப்பு செய்தனர்.  

பள்ளிவாசளின் விரிவாக்கம் காரணமாக காணி தம் கைவிட்டுப் போவதை அறிந்த அச்சமடைந்த உலமாக்கள் மீதமுள்ள பகுதியையில் எபாட்மண் கட்ட கடும் பிரயத்தனங்களில் மீண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

நடவடிக்கை எடுக்குமா ஜமியத்துல் உலமா?

அண்மைமையில் ஹஸன் பரீத் மெளலவியின் காணி அபகரிப்பு விவகாரம் வெளியான நிலையில், பள்ளிவாசல்களை பாதுகாக்க வேண்டிய, சமூகத்தை வழிநடத்த வேண்டிய அகில இலங்கை ஜமியத்துல் உளமாவின் உறுப்பினர்களும் செயலாளர்களும் இவ்வாறு மக்களை ஏமாற்றி, மக்கள் மத்தியில் சமூகத்தை ஏமாற்றி, சமூகத்தலைவர்களை ஏமாற்றி சமூகத்திற்கு சொந்தமான ஒரு பொதுச் சொத்தை திருடி விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது ஜமீயதுல் உலமா.

பள்ளிவாசலுக்காக வாங்கப்பட்ட நிலத்தில் ஒரு சான் அளவை கூட விட்டுக் கொடுப்பதில்லை என இப்பகுதி மக்கள் உறுதிபூண்டுள்ளனர். மேலும் இதை பாதுகாக்க இப்பகுதி மக்கள் மீடியாக்கள் உயர்மட்டங்கள் CID செல்ல தயாராகும் நிலயில், உலமாக்களினதும் சமூகத்தினதும் மறியாதையை பாதுகாத்து, ஒரு சகோதரரின் ஸதகதுல் ஜாரியாவை பள்ளி வாசலை பாதுகாக்க விழைவுகள் வினையாகி, நடக்க கூடாத விளைவுகள் நடந்து விபரீதமாகுமுன் தலைவர்கள் உரியவர்கள் 
நடவடிக்கை எடுப்பார்களா ?

குறிப்பு: இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க பள்ளிவாசலைக் காப்பாற்ற விரும்பும் எவரும் விளக்கங்களுக்காக தொடர்பு கொள்ளலாம். 

பேருவளை ஹில்மி  
0777913181

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.