ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
மேலும் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாக முன்னாள் சட்டமா அதிபர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான இரண்டு விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், இறுதித் தீர்மானங்கள் எதனையும் எடுப்பதற்கு முன்னர் பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)