இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சேனல் 4 வீடியோக்களை அகற்றியுள்ளது.
அதன் இணையதளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கியுள்ளது.
இந்நிலையில், ராஜபக்ஷேக்களுடன் சேனல் 4 இற்கு 2009 ஆம் ஆண்டு யுத்த முடிவிலிருந்து வரலாற்று ரீதியிலான பகை இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட காணொளிகளில் நம்பகத்தன்மை இருக்குமானால் அதை எதற்காக அவர்கள் தமது இணையத்தளத்திலிருந்து நீக்க வேண்டுமென இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக ராஜபக்ஷேக்களைப் பழி வாங்குவதற்கான இன்னுமொரு முயற்சியாக இது இருக்கலாம், அல்லது சிலரின் அரசியல் நோக்கங்களைத் திருப்திப்படுத்துவதற்காக சேனல் 4 புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என நாமல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.