ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 க்கு வழங்கிய பேட்டி தனிப்பட்ட வாழ்விற்காக காட்டிக்கொடுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 க்கு வழங்கிய பேட்டி தனிப்பட்ட வாழ்விற்காக காட்டிக்கொடுப்பு!


குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். 

 

நாடாளுமன்றில் இன்றைய தினம் (06) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். 

 

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்குதல் சம்பவமாகும். 

 

குறித்த குண்டுத் தாக்குதலை ஐ.எஸ் அமைப்பினரே மேற்கொண்டனர் என அதன் தலைவர் தெரிவித்திருந்தார். 

 

ஐ.எஸ் அமைப்பின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் அவர்கள் உரிமை கோரியிருந்தனர். 

 

தற்கொலை குண்டுத்தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பிலும் எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்பது தொடர்பிலும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

எவ்வாறாயினும் ஹன்சீர் அஷாட் மௌலானா வெளிநாட்டில் தஞ்சம் கோருவதற்காக இதனை மறுபக்கம் திருப்புவதற்கு முயற்சிப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

 

மதத்திற்காக மரணிப்போம் என சத்தியப் பிரமாணம் செய்த சிலர் சிறையிலும் வெளியிலும் இருக்கின்றார்கள். 

 

அவர்களை மரணிப்பதற்கு ஊக்குவித்த சில மதநிறுவனங்களும், அரசியல் சக்திகள், மற்றும் சர்வதேச சக்திகள் காணப்படுகின்றன. 

 

இதனை காப்பாற்றுவதற்கான அசாத் மௌலான மேற்கொண்டுள்ள பலத்த முயற்சியே செனல் 4 நிறுவனத்திற்கான சாட்சியமளிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

 

மேலும் நாட்டில் மீண்டும் ஒரு அச்சுறுத்தலான சூழலை உருவாக்க முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

 

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆண்டுவரையிலான காலப்பகுதியில் நான் சிறைச்சாலையிலிருந்தேன். 

 

அவ்வாறு சிறைச்சாலையிலிருக்கும் போது எவ்வாறு இவ்வாறானதொரு குற்றத்தை இழைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். 

 

மேலும் அஷாட் மௌலான போன்றவர்கள் தங்கள் வாழ்விற்காக காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களில் சில தமிழ் அரசியல்வாதிகள் அதில் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் சிவநேசத்துறை சந்திரக்காந்தன் குறிப்பிட்டார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.