சேனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
அதன் பிரதியைஅவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை சேனல் 4 இன் ஆவணப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிராகரித்து புலனாய்வு பிரிவின் அதிகாரி சுரேஸ் சாலே ஐக்கிய இராச்சியத்தின் ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை ஒவ்கொம் எனப்படும் அந்த அமைப்பு நிராகரித்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை சேனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில் சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்திற்கு நேரடியாக விடுக்கப்பட்ட வேண்டுகோள்களும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.
இந்த வேண்டுகோள் குறித்து ஆராயுமாறு லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் கொழும்பை கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறான சட்ட நடவடிக்கையில் தனியார் சட்டஅமைப்பொன்றை ஈடுபடுத்தினால் அதற்காக ஐந்து மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட் செலவாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.