04 வயதுடைய பெண் குழந்தையொன்று நேற்று (11) திடீரென தூக்கத்தில் உயிரிழந்துள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழந்தை ஹொரணையில் உள்ள திக்கேனபுர பகுதியைச் சேர்ந்தவர்.
நேற்று பிற்பகல் குழந்தை தனது தாயுடன் உறங்கச் சென்றதாகவும், ஆனால் படுக்கையை நனைத்ததால் உடைகளை மாற்றுவதற்காக தாய் குழந்தையை எழுப்ப முயன்றபோது உயிரற்ற நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை உயிரற்ற நிலையில் காணப்பட்டதையடுத்து, தாய் தனது கணவருக்கு அறிவித்து, அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உதவியுடன் ஹொரணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
எனினும், வைத்திய பரிசோதனையின் பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாக ஹொரண வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இன்று ஹொரண வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
இந்த மரணம் தொடர்பில் பாணந்துறை மற்றும் ஹொரண பொலிஸ் அதிகாரிகளால் கூட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)