2023 ஒருநாள் சர்வதேச உலக கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம், ஸ்ரீ லங்கா கிரிக்கட்டினால் இன்று (26) அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத்துவம் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில், தசுன் சானக்கவே உலக கிண்ணத் தொடரிலும், தலைவராக செயற்படவுள்ளார்.
தசுன் சானக்க தலைமையில், அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட குழாமில், குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, குஷல் ஜனித் பெரேரா, திமுத் கருணாரட்ன, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித்த, மகீஸ பத்திரன, லஹிரு குமார ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், வனிந்து ஹசரங்க, மஹீஸ் தீக்ஸன, தில்ஷான் மதுசங்க ஆகியோரது உடற்தகுதியின் அடிப்படையில் அவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என ஸ்ரீ லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.