2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளைய தினம் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த பரீட்சையை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை, கடந்த மார்ச் மாதம் இடம்பெற்றிருந்தது.
குறித்த பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகளுக்காக இணைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, அதன் பெறுபேறுகள் வெளியாவதில் இரண்டு மாதங்கள் தாமதம் ஏற்பட்டது.
அதன்படி, குறித்த பெறுபேறுகள் கடந்த 04 ஆம் திகதி வெளியானது.
இந்தநிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பெரும்பாலான மாணவர்களும் கோரியுள்ளனர்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை பரிசீலனை செய்து எதிர்வரும் தினங்களில் பரீட்சை ஆணையாளர் அறிவிப்பொன்றை வெளியிடுவாரென எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் அமைச்சினுடைய விரிவான அறிக்கையொன்றை நாளைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
பெரும்பாலும், சாதகமானதொரு பதிலை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.