அபுதாபி பிக் டிக்கெட்டின் சமீபத்திய டிராவில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் 20 மில்லியன் திர்ஹம் தொகை கொண்ட பெரும் பரிசை வென்றுள்ளார்.
Gulf News இன் படி , தொடர் 255 பிக் டிக்கெட் லைவ் டிராவில் துரைலிங்கம் பிரபாகர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
துரைலிங்கம் 16 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு குடிபெயர்ந்தார், தற்போது துபாயில் உள்ள வாலட் சேவை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றார்.
கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இரண்டு வாங்கினால் இரண்டு இலவசம் என்ற தள்ளுபடியை பயன்படுத்தி அவர் வெற்றிபெறும் டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கினார்.
துரைலிங்கம் கடந்த ஐந்து வருடங்களாக தனது நண்பர்கள் 10 பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து பிக் டிக்கெட்டுகளை வாங்குகிறார், அதைத் தொடர திட்டமிட்டிருந்தார்.
அவர்களின் பெரிய வெற்றியைப் பற்றி அவரது நண்பரிடம் கேட்டபோது, “இந்த வெற்றி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளியே வரவில்லை, நான் நினைக்கிறேன். இந்த வெற்றி வாழ்க்கையை மாற்றும்." என்றார். (யாழ் நியூஸ்)