மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பஸ்கள், லொறிகள், கொள்கலன் வாகனங்கள் மற்றும் பாரவூர்திகள் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கான பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தளர்த்தப்பட்டுள்ளன.
இதேவேளை, மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்:
https://drive.google.com/file/d/1aQVpY4aO5SlL8pTBxK0w0EQ92VdS76Mj/view