சுங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளின் பெயர்கள் போன்ற பதிவுகளை மோசடி செய்பவர்கள் பயன்படுத்துவதாக சுங்கப் பணிப்பாளர் சுதத் சில்வா தெரிவித்ததாக அருண பத்திரிகை தெரிவித்துள்ளது .
இனந்தெரியாத நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுவதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான மோசடி செய்பவர்கள் தொடர்பில் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு சுங்கப் பணிப்பாளர் சுதத் சில்வா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)