கண்டி வழியாக பயணிக்கும் ரயிலில் இருந்து கையடக்கத் தொலைபேசியை திருட முற்பட்ட சீன சுற்றுலாப் பயணி ஒருவரை காயப்படுத்திய சந்தேக நபர்கள் இருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி இங்குருஓயா புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரத பாதையருகே உள்ள பாறையில் நின்றிருந்த மூன்று சந்தேக நபர்கள், காட்சியமைப்பை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சீனப் பெண் ஒருவரின் கையிலிருந்து கைத்தொலைபேசியை தட்டி விட்டதாக லங்காதீப தெரிவித்துள்ளது .
எவ்வாறாயினும், சந்தேகநபர் தடியால் சுற்றுலாப் பயணியை தொலைபேசியில் தாக்கியதால் அவர் காயமடைந்தார்.
கொழும்பு - கோட்டையில் இருந்து பதுளை நோக்கி புறப்பட்ட உடரட மெனிகே ரயிலில் சுற்றுலா பயணி பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாவலப்பிட்டி பொலிஸார் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், மூன்றாவது சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.