இலங்கையில் ஒக்டோபர் மாதம் சில குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) இன்று அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை அமுல்படுத்தப்படும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான ஸ்ட்ராவ் வகைகள், கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், கரண்டிகள், சரமாரி தட்டுகள், மாலைகள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படும். (யாழ் நியூஸ்)