ஹோமாகம, கட்டுவன கைத்தொழில் வலயத்தில் உள்ள இரசாயன களஞ்சியசாலை ஒன்றில் நேற்று (17) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீயினால் பல கிலோமீற்றர் தூரம் வரை புகை மண்டலமாக காட்சியளித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
7 தீயணைப்பு வாகனங்களுடன் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வந்தனர்.
எனினும் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Massive fire reported at a factory at the Homagama Industrial Zone. pic.twitter.com/pVQobicg0P
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) August 17, 2023