திருகோணமலை - சீனக்குடா விமான பயிற்சித் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமான பயிற்சியாளர் உட்பட இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் ஈடுபடுவதற்காக இன்று (08) முற்பகல் விமானத்தை செலுத்துவதற்கு முற்பட்ட போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
PT 6 ரக விமானம் இன்று காலை வான் சோதனைக்காக புறப்பட்டு முற்பகல் 11.27 மணியளவில் சீனக்குடா முகாமில் விழுந்து நொறுங்கியதாக குரூப் கப்டன் விஜேசிங்க தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.