வெயாங்கொடை பகுதியில் மீட்கப்பட்ட வர்த்தகர் ஒருவர் பலாங்கொடை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
நபர் ஒருவரிடம் 50 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு நீண்டகாலமாக மீள செலுத்தாமையினால் பணம் கொடுத்தவரினால் வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடத்தியவரால் வர்த்தகரின் சகோதரிக்கு தொலைபேசி அழைப்பொன்று ஏற்படுத்தப்பட்டு, பணத்தை செலுத்தாவிட்டால் கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு 50 இலட்சம் ரூபாய் பணத்தை குறித்த வர்த்தகர் கடனாக பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் நீண்டகாலமாக அவர் மீள செலுத்தாது ஏமாற்றிய நிலையேயே கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தலுடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.